தமிழ்நாடு

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

7th Oct 2020 10:03 AM

ADVERTISEMENT

அதிமுக கட்சி செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள 11 பேர் விவரம்:

அமைச்சர்களும் அதிமுக அமைப்புச் செயலர்களுமான திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், அமைச்சர்  மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலர் சி.வி.சண்முகம், அமைச்சர் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலர் ஆர். காமராஜ், அதிமுக அமைப்புச் செயலர்கள் ஜே.சி.டி. பிரபாகர், பி.எச். மனோஜ் பாண்டியன், ப.மோகன்,  தேர்தல் பிரிவு இணைச் செயலர் இரா. கோபாலகிருஷ்ணன்,  சோழவந்தான் எம்எல்ஏ கி. மாணிக்கம்.

ADVERTISEMENT

அதிமுக ஒருங்கிணப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : AIADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT