தமிழ்நாடு

தமிழக எல்லைப் பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டம்

7th Oct 2020 04:01 PM

ADVERTISEMENT

 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் உத்தரவின் பேரில் தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக-ஆந்திர எல்லையில் தமிழக பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு தலைமையில் அதிமுகவினர் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆரம்பாக்கம் பஜாரில்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெ.தனசேகர், அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், நிஜாம், ஐயப்பன்,ராஜீ, முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் ஓடை ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

ADVERTISEMENT

கவரப்பேட்டையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி தலைமையில் சுந்தம், மீரான், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று பட்டாசு வெடித்து அனைத்து கடைக்காரர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

புதுகும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிமுக பிரமுகர் எல்.சுகுமாறன் தலைமையில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், அதிமுக பிரமுகர்கள் ராஜா, விஜய் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதே போல கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளிலும், பல்லவாடாவில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் தலைமையிலும், பெரிய புலியூரில் மாவட்ட பிரதிநிதி ஷியாமளா தன்ராஜ் தலைமையிலும், பூவலம்பேட்டில் கருணாகரன் தலைமையிலும் அதிமுகவினர் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT