தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

7th Oct 2020 06:03 PM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையொட்டி நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் புதன்கிழமை அதிமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

இக்கொண்டாட்டத்திற்கு நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் யோகா வாசுதேவன் முன்னிலை வகித்தார். அப்போது அருப்புக்கோட்டை அண்னா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினர். 

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் அதிமுகவினர் கொண்டாடினர். உடன் கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT