தமிழ்நாடு

திருச்சுழியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

7th Oct 2020 02:18 PM

ADVERTISEMENT


அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததைத் தொடர்ந்து  திருச்சுழி வடக்கு ஒன்றியத்தின் சார்பாக புதன்கிழமை பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞரணி ஒன்றிய துணைச் செயலர் முத்துவேல், திருச்சுழி நகரச் செயலாளர் மாடசாமி, சிறுபான்மை ஒன்றிய செயலாளர் நாகூர் கனி, ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய பொருளாளர் சிங்கம்புலி, மாவட்ட பிரதிநிதி திருமுருகன், திருச்சுழி பாலமுருகன், வேல்முருகன் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் முதலைக்குளம் கருப்பு, பச்சேரி சுப்பையா, மடத்துப்பட்டி செல்வம், வேலாயுதபுரம் ஹரி கிருஷ்ணன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ADMK Celebration
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT