தமிழ்நாடு

அக். 31 வரை மெரீனாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி

5th Oct 2020 12:39 PM

ADVERTISEMENT

சென்னை: பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபர் 31 -ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர்  மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி இரண்டு முறை திறக்கப்படவில்லை. வரும் நவம்பர் 9-ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். 3 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர். பொதுமக்களுக்கு மெரீனாவை  திறப்பதை பொருத்தவரை, தமிழகத்தில் பொது முடக்கத்தை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி  வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்  பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரீனா கடற்கரையில்  பொதுமக்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT