தமிழ்நாடு

திருத்தணி சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

5th Oct 2020 05:44 PM

ADVERTISEMENT

 

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்துப் பாதுகாக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், அச்சங்கத்தின் தலைவர் ஜி.சம்பத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, இந்த மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். அதனால், கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரும்புக்கு உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்பதால், கொள்முதல் உயர்த்தாதது போன்றவைகளால் பயிரிடும் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த மாவட்டத்தில் 5 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆலையில் 2.75 லட்சம் டன் கரும்பு அரைத்துள்ளனர்.

ADVERTISEMENT

அதையடுத்து மீதமுள்ள கரும்புகள் வெல்லம் தயார் செய்யவும், ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விதியை மீறிக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சர்க்கரை ஆலையில் அரவை என்பது 1.15 லட்சம் டன்னாகவும், பிழி திறனும் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதற்கு காரணம் ஆலையில் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகும். அதனால், புனரமைத்துச் சீரமைத்துப் பாதுகாக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு முன்னதாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் கோரிக்கையை வலியுறுத்தி வந்து எம்.ஜி.ஆர் சிலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT