தமிழ்நாடு

ஜம்மு-காஷ்மீரில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம்: 3 பேர் காயம்

5th Oct 2020 03:14 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

நவ்காம் பகுதியில் உள்ள காண்டிசல் பாலம் அருகே இன்று பிற்பகல் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மூன்றுக்கு மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் இங்குள்ள இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT