தமிழ்நாடு

கொடைக்கானலில் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

3rd Oct 2020 06:01 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் இ-பாஸ் எடுத்து கொடைக்கானல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

சுற்றுலா இடங்களான வெள்ளி நீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கர்ஸ் வாக், பாம்பார் அருவி உள்ளிட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது இதனால் மலைச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டதில் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனர்.

ADVERTISEMENT

இதனால் இன்றும் கொடைக்கானலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததால்  மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை.

கொடைக்கானலில் மழையில்லாத நிலையிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT