தமிழ்நாடு

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் வடகிழக்கு பருவமழை உதவி மையம் திறப்பு

DIN

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில்  எதிர்வரும் வடகிழக்கு பருவமழை இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு  நலன் கருதி  தகவல் மற்றும் சேவை மையம்  திறக்கப் பட்டுள்ளதாக செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.

பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையத்தின் தரைவழி தொலை பேசி 04364 279320 அல்லது  செல்பேசி 7824058346 எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுமக்கள் இடி மின்னலிலிருந்து பாதுகாப்பாக தற்காத்துக் கொள்ளவதற்கு மரங்களின் கீழ் நிற்க கூடாது. மின் கம்பங்களில் கால் நடைகளை கட்டக்கூடாது. அறுந்து விழுந்த மின் கம்பிகளை மிதிக்க கூடாது. வீட்டை சுற்றி உள்ள அபாயமான மரகிளைகளை முன்னெச்சர்க்கையாக வெட்டி அகற்றவும்.

சாலை ஓரங்களில் வடிகால்களை ஆக்கிரமிக்க கூடாது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை புனரமைக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள கொசுக்கள் வளர வாய்ப்புள்ள மழை நீர் தேங்கும் தேவையற்ற பழைய பொருள்களை உடனடியாக  அப்புறப் படுத்த வேண்டும். காய்ச்சி வடிகட்டிய  குடிநீர் மட்டுமே பருக வேண்டும்.

யூபிஎஸ் கருவிகளை பராமரித்து வைக்க வேண்டும். டார்ச் லைட், ரேடியோ இயங்குகிறதா என சரி பார்த்து வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT