தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

3rd Oct 2020 03:11 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழக்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

ஏற்காடு (சேலம்) 9 செ.மீ மழையும், மே.மாத்தூர் (கடலூர்) 6 செ.மீ மழையும், வேப்பூர் (கடலூர்) தலா 5 செ.மீ மழையும், சேலம், பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கடலூர் தலா 4 செ.மீ மழையும், கொள்ளிடம் (நாகப்பட்டினம்), தருமபுரி, உள்ளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT