தமிழ்நாடு

7 மாதங்களுக்குப் பின் அந்தியூர் கால்நடைச் சந்தை திறப்பு

3rd Oct 2020 04:01 PM

ADVERTISEMENT

 

கரோனா பொது முடக்கம் அமல் செய்யப்பட்டதால் மூடப்பட்ட அந்தியூர் கால்நடை சந்தை 7 மாதங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கால்நடைச் சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை கூடுவது வழக்கம். இங்கு, அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கால்நடைகளை விற்கவும், வாங்கவும் கூடுவர். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதலே சந்தை வளாகம் பரபரப்பாகக் காணப்படும்.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கத்தை அறிவித்ததால். இச்சந்தை மூடப்பட்டது. இதனால், கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்க முடியாமலும், புதிதாக கால்நடைகள் வாங்கவும் முடியாமல்  தவித்து வந்தனர்.

ADVERTISEMENT

வீடு தேடி வரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலை காணப்பட்டது. இந்நிலையில், கரோனா முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமை கால்நடைச்சந்தை கூடியது.

இதைத்தகவலறிந்த விவசாயிகள் தங்களின் ஆடு, மாடு மற்றும் எருமைகளைக் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். ஆனால், வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள் மிகக் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.  இதனால், நீண்ட நேரம் காத்திருந்தும் உரிய விலை கேட்கப்படாததால் கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.

வழக்கமாக 300 முதல் 350 கால்நடைகள் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது 50 கால்நடைகளுக்கும் குறைவாகவே விற்பனைக்கு வந்திருந்தது. இதனால், ஏழு மாதங்களுக்குப் பின்னர் கூடிய அந்தியூர்  கால்நடை சந்தை பொலிவிழந்து காணப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT