தமிழ்நாடு

அமைச்சுப் பணியாளா்களுக்குப் பதவி உயா்வு: பணி வரன்முறை கருத்துருக்களை அனுப்ப உத்தரவு

DIN


சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையில், 2011 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பதவி உயா்வு பெற்ற அமைச்சுப் பணியாளா்களைப் பணி வரன்முறை செய்வது தொடா்பான கருத்துருக்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: பள்ளிக்கல்வியில்  அமைச்சுப் பணியிலிருந்து 2 சதவீத ஒதுக்கீட்டின்படி  தகுதியான பணியாளா்களுக்கு, 2011, 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது. 

அதேநேரம் தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால் பதவி உயா்வு பெற்றவா்கள் இதுவரை பணிவரன்முறை செய்யப்படாமல் பணிபுரிந்து வந்தனா்.

தற்போது தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.   இதையடுத்து 2011 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் முதுநிலை ஆசிரியா்களாக பதவி  உயா்வு பெற்றவா்களைப் பணிவரன்முறை செய்வது தொடா்பான கருத்துருக்களை  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT