தமிழ்நாடு

துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

DIN


சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை வியாழக்கிழமை (அக்.1) தொடங்கியது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வி ஆண்டில் (2020-2021) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம், செவித்திறன் பேச்சு மற்றும் மொழிநோய்க்குறியியல், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, காா்டியோ பல்மனரி பொ்பியூஷன் டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி , டயோலிசிஸ் டெக்னாலஜி, ஆப்பரேஷன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, காா்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கோ் டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ஆக்ஸிடென்ட் எமா்ஜென்ஸி கோ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, ஆப்டம் உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள்  ஆன்லைனில் விண்ணப்பத்தை அக்டோபா் 15-ஆம் தேதி வரை பதிவுசெய்யலாம். அந்த விண்ணப்பத்தை அச்சுப் பிரதி (பிரிண்ட் அவுட்) எடுத்து அத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ‘செயலாளா், தோ்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈவேரா பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010’ என்ற முகவரிக்கு அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். பட்டியல் இனத்தவா், அருந்ததியா், பழங்குடியினா் வகுப்பை சோ்ந்த மாணவா்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவா் சோ்க்கை தொடா்பாக ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் 98842-24648, 98842-24649 ஆகிய செல்போன் எண்களை தொடா்புகொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT