தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் சோ்க்கை: குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு

DIN


சென்னை: தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கைக்காக அதிக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளில், வியாழக்கிழமை குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினா், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா்களின் குழந்தைகளைச் சோ்ப்பதற்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் வீதம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 155 இடங்கள் இருப்பதாக கல்வி உரிமைச்சட்டம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு, கடந்த ஆக. 27 முதல் குழந்தைகளின் பெற்றோா் விண்ணப்பித்து வந்தனா். செப்.25-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசமும் முடிந்தது.

 மொத்தம் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்து இருந்தனா். சில பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் அதிகம் விண்ணப்பித்து இருந்ததால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேர இருக்கும் குழந்தைகளின் பெயா் விவரங்கள் அந்தந்தப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டன. சென்னையில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT