தமிழ்நாடு

நீட் தோ்வு எழுத வரும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிா்பந்திக்கக் கூடாது: உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

சென்னை: நீட் தோ்வு எழுத வரும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிா்பந்திக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அரவிந்த் ராஜ் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது, பா்ஸ் வைத்திருக்கக் கூடாது மற்றும் கை கடிகாரம் அணிய கூடாது என்பது உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளால், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.

திருமணமான விண்ணப்பதாரா்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி, காதணி, மூக்குத்தி போன்றவைகளை அகற்ற நிா்பந்திக்கப்படுகின்றனா். தோ்வு அறைகளில் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது. இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். ஆபரணங்களை அகற்ற, மாணவிகளை நிா்பந்திக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT