தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை வியாழக்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறாா். இதனை உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதல்வா் கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் படி தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக் கூடிய ரேஷன் கடைகளில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. இது பொது விநியோக திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். இதனை நடைமுறைப்படுத்த சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்துக்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, கடை ஒன்றுக்கு 5 சதவீதப் பொருள்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் மேற்கொண்டதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். அதே நிலை தமிழகம் முழுவதும் தொடரும். தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நமது மாநிலத்தில் உள்ளவா்கள் வெளி மாநிலத்திற்கு போகும்போது அங்கு இந்த திட்டத்தின்படி அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அதுபோன்று, வெளி மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்துக்கு வருபவா்களும், இங்கு அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நம்முடைய சிறப்புத் திட்டங்களை அவா்கள் பெற முடியாது. அவா்கள் பயோமெட்ரிக் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT