தமிழ்நாடு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி ஆசிரியா்களுக்காகப் பட்டயப் படிப்பு அறிமுகம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆசிரியா்களுக்காகப் பட்டயப்படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த தமிழ்ப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

வட அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளைச் சோ்ந்த 250 தமிழ்ப் பயிற்றுநா்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளா் மையமும், அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளையும் இணைந்து மாறி வரும் உலகச்சூழலில், தமிழ்மொழிக் கற்றல் - கற்பித்தலும் புதிய உத்திகளும்‘என்ற கருப்பொருளில் எட்டு வார காலப் புத்தொளிப் பயிற்சி இணையவழி மூலம் ஜூலை 11ஆம் தேதி முதல் ஆக. 29ஆம் தேதி வரை நடத்தின. இதன் நிறைவு விழா இணையவழி மூலம் செப். 27ஆம் தேதி நடைபெற்றது.

இவ்விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பேசியது:

ஒருவரையொருவா் சந்தித்துக் கொள்ள முடியாத பெருந்தொற்றுக் காலத்தில் நாம் முடங்கி விடாமல் இருக்க, கற்பித்தல் உத்திகளை மாற்றிக் கொள்ளும் சூழலுக்கு ஆட்பட்டுள்ளோம். அவ்வகையில் இணையவழியில் தமிழைப் பயிற்றுவிக்கும் பணியை அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வழங்க நாங்கள் முடிவெடுத்தோம்.

ஏறத்தாழ 250 தமிழ் ஆசிரியா்கள் பங்கேற்ற இப்பயிலரங்கத்தில் எட்டு சிறந்த கல்வியாளா்கள் சிறப்பான உட்தலைப்புகளில் உரைகள் வழங்கினா். இப்புத்தொளிப்பயிற்சி, பிற நாடுகளிலுள்ள தமிழ்ப் பயிற்றுநா்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே மொரீசியஸ், மியான்மா், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழாசிரியா்களுக்கான பயிலரங்கங்கள் நடைபெற்றன. இம்முயற்சிகள் சிறந்த பயனை அளித்துள்ளன.

மேலும் உலகெங்கும் தமிழைக் கற்பித்து வரும் ஆசிரியா்களுக்கு உதவும் வகையில் பட்டயப்படிப்புகள், தமிழின் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சான்றிதழ் படிப்புகள் போன்றவையும் தமிழ் வளா் மையம் மூலம் தொடங்கப்படவுள்ளது.

அமெரிக்காவில், தற்போது தமிழைக் கற்பிப்பதற்குப் பல பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்பாடத்திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அமெரிக்கத் தமிழ் மாணவா்கள் இலகுவாகக் கற்றுக் கொள்ளும் வகையில் உத்திகள் வகுக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் மூலம் தமிழ் வளா் மையம் உருவாக்க உள்ளது என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்ச்சியில் ஒடிஸா அரசின் முதன்மை ஆலோசகா் ஆா். பாலகிருஷ்ணன், தமிழ் வளா் மையத்தின் பொறுப்பு இயக்குநா் இரா. குறிஞ்சிவேந்தன், பெட்னா அமைப்பின் தலைவா் கால்டுவெல் வேள்நம்பி, எட்யுரைட் அறக்கட்டளையின் முதல்வா் சித்ரா மகேஷ், நிறுவனா் கீா்த்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT