தமிழ்நாடு

காஞ்சிபுரம் ராஜகுபேர சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிப்பு

1st Oct 2020 04:12 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் அருகே குபேரப்பட்டிணத்தில் அமைந்துள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை புதியதாக தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே குபேரப்பட்டிணத்தில் ராஜகுபேரசுவாமிக்கு திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய தங்கக்கவசமும் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சிவவாத்தியங்களின் இசையுடன் தனாபிஷேகமும்,சிறப்பு தீபாராதனைகளும் அன்னதானமும் நடந்தது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சி.கிருஷ்ணன்,பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் திருவேங்கடம், கே.வேணுகோபால்,முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சி.எம்.தி.விஜயலெட்சுமி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் கூறுகையில், கடன் தொல்லைகளால் அவதிப்படுவோர் அதிலிருந்து விடுபடுவதற்காக வாரம்தோறும் வியாழக்கிழமை தன அபிஷேகமும், அன்னதானமும் நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை பௌர்ணமியாக இருந்ததால் புதியதாக செய்யப்பட்ட தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. 

 

சிவனும், ராஜகுபேரரும் ஒரே இடத்தில் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு பௌர்ணமியும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT