தமிழ்நாடு

ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

1st Oct 2020 05:53 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 5-ம் தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலைகப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளானது, ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

 

Tags : TNPSC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT