தமிழ்நாடு

கரோனா விதிமீறல்: குன்னூரில் அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்

DIN

குன்னூா்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் அரசுப் பேருந்தில்  முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி யும் பயணிகள் பயணம் செய்ய அனுமதித்த   நடத்துநருக்கு கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் ரூ. 500 அபராதம் விதித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி இன்றி அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நகரில் இயக்கப்பட்ட பல பேருந்துகளில் குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் புதன்கிழமை சோதனை நடத்தினாா். அப்போது ஒரு அரசுப் பேருந்தில் முகக் கவசம் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும்  பொதுமக்கள் பயணம் செய்ததைக் கண்டறிந்தாா். இதையடுத்து அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியில் அலட்சியமாக இருந்த நடத்துநா்  ரமேஷுக்கு  ரூ. 500 அபராதம் விதித்தாா். கரோனா விதிகளை மீறியதாக  அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்  விதிக்கப்பட்டது நீலகிரி மாவட்டத்தில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT