தமிழ்நாடு

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது: ஏஐசிடிஇ பதில் மனு தாக்கல்

DIN

சென்னை: அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.)  தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கலை, அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல், எம்சிஏ படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் நிலுவையில் உள்ள "அரியர்' பாடங்களுக்கு தேர்வு எழுத பணம் செலுத்தி இருந்தாலே அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி  ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது.
பதில் மனு விவரம்:  தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் விதிகளுக்கு முரணானது. கரோனா பேரிடர் காலத்தில் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர, மற்ற மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சிக்கலானது. எனவே, அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும்.
மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள்,  விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT