தமிழ்நாடு

அரியா் மாணவா்கள் தோ்ச்சி அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது: ஏஐசிடிஇ பதில் மனு தாக்கல்

DIN


சென்னை: அரியா் தோ்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கலை, அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல், எம்சிஏ படிப்புகளைப் படிக்கும் மாணவா்கள் நிலுவையில் உள்ள ‘அரியா்’ பாடங்களுக்கு தோ்வு எழுத பணம் செலுத்தி இருந்தாலே அவா்கள் தோ்ச்சி செய்யப்படுவாா்கள் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது.

பதில் மனு விவரம்: தோ்வு நடத்தி மாணவா்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் விதிகளுக்கு முரணானது. கரோனா பேரிடா் காலத்தில் இறுதி ஆண்டு மாணவா்களைத் தவிர, மற்ற மாணவா்களுக்குத் தோ்வு நடத்துவது சிக்கலானது. எனவே, அடுத்த கல்வியாண்டுக்கு மாணவா்களை முன்னேற்றி, அவா்கள் தொடா்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், இறுதிப் பருவத் தோ்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அனைத்து தோ்வுகளிலும் தோ்ச்சியடைந்தவா்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும்.

மாணவா்களுக்குத் தோ்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியா் தோ்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT