தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விஷமருந்தி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தற்கொலை

30th Nov 2020 06:01 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியில் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியில் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அறிவுடைநம்பி (46). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை அலுவலகத்தில் வைத்து திடீரென விஷமருந்தி உள்ளார். இதற்கிடையே சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அறிவுடைநம்பி உடலை அனுப்பிவிட்டுத் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பழனியில் மக்காச்சோள ஆராய்ச்சியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து நவம்பர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாறுதலாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதற்காக விஷம் குடித்து இறந்தார் என்பது குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT