தமிழ்நாடு

சேலம்: போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் மனு

DIN

வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்பட கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் தரப்பில் மனு அளிக்துப்பட்டது.

தமிழகத்தில் கனரக வாகனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அதில் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல் ஒளிரும் பட்டை ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதற்குக் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் லாரி உரிமையாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாத காலமாக லாரியை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை செயல்படுத்த முடியாமல் லாரி உரிமையாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற  வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 49 தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்தலாம் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது இந்த நிலையில் இதனைக் கண்டித்து இன்று சேலம் கந்தம்பட்டி துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மனு வழங்கினார் .

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் தனராஜ் கூறுகையில்,

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருதுதல் ஒளிரும் பட்டை ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையர் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே 20 சதவீத லாரிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு லாரி உரிமையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் ஒளிரும் பட்டை ஓட்டுவதற்கு 1200 ரூபாய் மட்டுமே செலவாகும், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள புதிய ஒளிரும் பட்டைக்கு 6000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை செலவாகும் எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களில் தீர்வு காணாவிட்டால் மாநில லாரி உரிமையாளர் சங்கம் செயற்குழுவை கூட்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கும் எனத் தெரிவித்தனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT