தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 3,000 வரை குறைந்துள்ளது. அதன்படி, நவ.30-ம் தேதி நிலவரப்படி சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ரூ.4,524- ஆக விற்கப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.63.30 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.63,300 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,524

1 சவரன் தங்கம்...............................36,192

1 கிராம் வெள்ளி.............................63.30

1 கிலோ வெள்ளி.............................63,300

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,574

1 சவரன் தங்கம்...............................36,592

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT