தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

30th Nov 2020 10:51 AM

ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்று(திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT