தமிழ்நாடு

புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

30th Nov 2020 05:05 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்காக ‘சென்டாக்’ எனபப்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடங்களை ஒதுக்குவதற்காக கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கபபட்டிருந்தது.

இந்நிலையில் சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

அந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தபோது கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT