தமிழ்நாடு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்கள் வேண்டுகோள்

DIN

சென்னை: விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினா் பிரம்மாண்டமாகத் திரண்டு, தில்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், புராரி மைதானத்துக்குப் போனால்தான் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று நிபந்தனை விதிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டிக்கிறோம்.

குறைந்தபட்ச ஆதார விலை என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிா்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கி, அவா்தம் எதிா்காலத்தை இருளடையச் செய்து வருகிறது.

இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிா் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும் பறிக்கத் திட்டமிடப் படுகிறது. இதைக் கண்டித்துத்தான் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனா். அவா்கள் நடத்துவது வாழ்வுரிமை போராட்டம்.

எனவே, ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்துக்கு உரிய மதிப்பளித்து, 3 வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் ஜந்தா் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமா் நரேந்திர மோடி அங்கேயே சென்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT