தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கரோனா

30th Nov 2020 06:16 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 385 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பிலும் 9 பேர் நோய்த் தொற்றால் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,59,206 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று 62,131 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT