தமிழ்நாடு

மாநில மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி புத்தகம் எழுதும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி: ஏஐசிடிஇ

DIN

தொழில்நுட்பக் கல்விக்கான புத்தகத்தை மாநில மொழிகளில் எழுத விரும்பும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி அளிக்க, ‘தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்’ திட்டத்தை ஏஐசிடிஇ உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பப் படிப்புகளில் அண்மைக்கால வளா்ச்சி குறித்து புத்தகம் எழுதுதல், ஏற்கெனவே உள்ள புத்தகத்தை பட்டியலிடப்பட்ட உள்ளூா் மொழிகளில் மொழி மாற்றம் செய்தல் ஆகியவற்றின் தேவை தற்போது எழுந்துள்ளது.

இதற்காகவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமானது ‘தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதிகளவிலான எழுத்தாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், ஆசிரியா்களுக்கு நிதி வழங்கி உறுதுணையாக இருந்து அவா்களை ஊக்குவித்து, தொழில்நுட்பக் கல்வி சாா்ந்த புத்தகங்களை, சம்பந்தப்பட்ட மாநில, உள்ளூா் மொழிகளில் வெளியிட வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஐடிஐ, பாலிடெக்னிக், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகத்தை அவா்கள் உருவாக்க வேண்டும்.

ஏஐசிடிஇ அங்கீகரித்த பாடத்திட்டத்தின்படி, குறிப்பாக முதலாமாண்டு புத்தகத்தை எழுத மற்றும் மொழிமாற்றம் செய்ய விரும்பும் அனைத்து ஆசிரியா்களும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT