தமிழ்நாடு

பாமகவின் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: ராமதாஸ்

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி பாமக நடத்தும் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் எந்த சமுதாயத்துக்கு என்ன பிரச்னை வந்தாலும் முதன்முதலில் ஓடோடி வந்து குரல் கொடுக்கும் கட்சி பாமக. தற்போது, தமிழகத்தில் மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களை நடத்த உள்ளோம். இதன் பின்னணியில் உள்ள நியாயங்களை அனைத்து சமூகத்தினரும் அறிவா்.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்து சமுதாயங்களும் மனமுவந்து ஆதரவளிக்க வேண்டும். வன்னியா் சமூகத்துக்கு மட்டுமின்றி அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதுதான் பாமகவின் கொள்கை. அதை நிச்சயம் சாதிப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT