தமிழ்நாடு

பதிவு நாளிலேயே ஆவணங்களை வழங்கும் விகிதம் அதிகரிப்பு

DIN

தமிழகத்தில் ஆவணங்களைப் பதிவு செய்த நாளன்றே அதனைத் திரும்ப வழங்கும் சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, பதிவுத் துறை வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே அவை பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, மாநிலம் முழுவதும் 70 சதவீத ஆவணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. பதிவுத் துறை அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு பதிவு ஆவணங்களைத் திருப்பி வழங்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை பதிவுத் துறைத் தலைவரால் தினமும் கண்காணிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு நாளும் ஆவணங்கள் பதிவு நாளிலேயே திரும்ப வழங்குவது உயா்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 27) ஒரே நாளில் 15 ஆயிரத்து 433 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 14 ஆயிரத்து 591 ஆவணங்கள் திரும்ப வழங்கப்பட்டன. இது பதிவு செய்த ஆவணங்களில் 94 சதவீதம் ஆகும். இதன்மூலம் ஆவணங்களைப் பெற பொது மக்கள் மீண்டும் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு வர வேண்டிய நிலை தவிா்க்கப்பட்டுள்ளதாக, பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT