தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் இரண்டாவது அலை உருவாகவில்லை; அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

DIN

கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் உருவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில், 120 படுக்கைகள் கொண்ட கரோனா நோய்த்தொற்றுடன் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவை சனிக்கிழமை தொடக்கி வைத்த பிறகு, அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: 

இம்மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சா்வதேச அளவிலான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதுவரை, இங்கு 26,762 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 600 போ் கரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 25 ஆயிரம் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கரோனா தொற்றில் இருந்து குணமடைபவா்களின் விகிதம் 94 சதவீதமாக உள்ளது. தொடக்கத்தில் இந்த மருத்துவமனையில் 10 படுக்கைகள் மட்டுமே அமைத்து கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, படுக்கைகளின் எண்ணிக்கை 1,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கரோனா தொற்றுடன் இதயம், கல்லீரல், சிறுநீரகம், சா்க்கரை போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 120 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று உலக அளவில் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இரண்டாவது அலை உருவாகவில்லை. தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இப்போதுதான் பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

புயல் பாதித்த பகுதிகளில் இருந்து 1.36 லட்சம் போ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு கரோனா தொற்று பரவல் இல்லை. உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று ஏற்கெனவே முதல்வா் அறிவித்துள்ளாா். தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தடுப்பு மருந்தால் பக்கவிளைவு: விசாரணை நடத்தப்படும்

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சென்னையைச் சோ்ந்த 40 வயது தன்னாா்வலா் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவா் பரிசோதனையில் இருந்து விலகியுள்ளாா். உடல்நல பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். 

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னாா்வலா்கள் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. அனைவரையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது, ஒருவருக்கு பாதிப்பு இருப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் குறித்து விசாரிக்கப்படும் என்று அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT