தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சிக்கான படைப்புகளை டிச.25-க்குள் அனுப்பலாம்

DIN

அறிவியல் கண்காட்சிக்கான படைப்புகளை, டிச.25-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் புத்தாக்க அறிவியல் ‘மானக் விருது’க்காக 2018-19,  2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான மாநில அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. 

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் புத்தாக்க நிறுவனம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி மாநில அளவிலான கண்காட்சி இணையவழியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘மானக் திறன் போட்டிகள்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் தங்கள் அறிவியல் செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்லிடப்பேசி அல்லது இணையதளம் மூலமாக டிச.25-க்குள் அனுப்ப வேண்டும். அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்கி குறிப்பிட்ட தேதிக்குள் படைப்புகளை அனுப்ப மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். 

இதுதவிர மென்பொருளை பயன்படுத்துவது சாா்ந்து, மாணவா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து மாணவா்களின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு தனிப்பட்ட இணையவழி கலந்தாய்வு கூட்டம் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. எனவே, அந்த ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT