தமிழ்நாடு

டிச. 1 முதல் பழனி கோயிலில் 50 சதவிகித பக்தர்களுடன் மின்இழுவை ரயில் இயக்கம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் 50 சதவிகித பக்தர்களுடன் மின்இழுவை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அரசு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுவர் என்றும் வரும் ஒன்றாம் தேதி முதல் மின்இழுவை ரயில் இயக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பழனிக் கோயிலில் டிச.1 முதல் மூன்று வின்ச்சுகளும் 50 சதவிகித பக்தர்களுடன் இயக்கப்படும் மின்இழுவை ரயிலில் இருவழிப்பாதை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

செல்போன், கேமரா போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யமுடியும். எந்த வின்ச்சுக்கு எந்த நேரத்துக்கு பதிவு செய்யப்பட்டதோ அதில் மட்டுமே பயணிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு கால்மணி நேரம் முன்னரே அசல் ஆதார் போன்ற சான்றுகளுடன் நிலையம் வந்துவிட வேண்டும் என திருக்கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, ஐ.ஏ.எஸ்., அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT