தமிழ்நாடு

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

DIN

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் திறந்து வைத்தார். மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என்றார். 

பழைய பாசன பகுதிகளுக்கு 60 கனஅடி தண்ணீரும், புதிய பாசன பகுதிகளுக்கு 40 கனஅடி தண்ணீர் என மொத்தம் 100 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் என மொத்தம்  5259 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. 

பழைய பாசன பகுதிகளுக்கு நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 17 நாட்களுக்கு 60 கனஅடி தண்ணீரும், டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 47 நாட்களுக்கு 50 கனஅடி தண்ணீரும், ஜனவரி 1 ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை 43 நாட்களுக்கு 45 கனஅடி தண்ணீரும் 107 நாள்களுக்குத் திறந்து விடப்படுகிறது.

மேலும், புதிய பாசன பகுதிகளுக்கு நவம்பர் 29ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 2 நாள்களுக்கு 40 கனஅடி தண்ணீரும், டிசம்பர் 1 ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 90 நாள்களுக்கு 30 கனஅடி தண்ணீரும், மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 15 நாட்களுக்கு 20 கனஅடி தண்ணீர் என 107 நாள்களுக்கு பழைய மற்றும் புதிய பாசனத்திற்கு 724 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் இன்றைய நிலவரம்

அணையின் உயரம் - 57 அடி, நீர்மட்டம் - 55 அடி, நீர்வரத்து - 46 க.அடி, நீர் வெளியேற்றம் 100 க.அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT