தமிழ்நாடு

விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்: மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN


சேலம்: தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் விவசாயிகள் மீது காவல்துறையினரின் தாக்குதலைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து தில்லியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலைக் கண்டித்தும், மத்திய அரசு மூன்று வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும், அதிமுக அரசு மத்திய அரசுக்கு துணை போகக்கூடாது, விவசாயிகளை அழிக்க நினைக்கும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ. டி. கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், சேலம் மாவட்ட செயலாளர் கவின்ராஜ், மாவட்ட தலைவர் பகத்சிங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT