தமிழ்நாடு

கூடலூரில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கூடலூர் பொம்மச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மூர்த்தி(37). இவர் ஒலிப்பெருக்கி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை கூடலூர் குமுளி பிரதான சாலையில் உள்ள பொம்மச்சியம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழாவிற்காக மின்சார விளக்குகள் அமைக்க வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது சீரியல் பல்பு வயரில் உள்ள மின்சாரம் அவரது மார்பில் தாக்கியதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் தனியார் வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கூடலூர் தெற்கு காவல் ஆய்வாளர் கே.முத்துமணி வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT