தமிழ்நாடு

சங்ககிரி கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் ஏழை பெண்களுக்கு கால்மிதியடி தயாரிப்பு இயந்திரம் வழங்கல்

DIN

 
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 

அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநர் டி.இளங்கோவன் இவ்விழாவிற்கு தலைமை வகித்து சங்ககிரி கோட்டை அரிமா சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பேசியது:-

நம் நாட்டில் வரும் காலங்களில் தண்ணீரை சேமிக்க ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மழை நீரை சேமித்து அதனை கருவிகளை கொண்டு தூய்மைப்படுத்தி அந்நீரை அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார். 

பின்னர், சங்ககிரி கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ் சார்பில் குடிசை தொழிலாளாக செய்து வரும் கால்மிதியடிகள் தயாரிப்புக்கு தேவையான இயந்திரத்தை  இரு ஏழை பெண்களுக்கு  தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான தலா ஒரு இயந்திரத்தை இலவசமாக வழங்கினார். 

அரிமா சங்கங்களின் மண்டலத்தலைவர் பி.சண்முகம் முன்னிலை வகித்தார்.  கோட்டை அரிமா சங்கத்தின் தலைவர் கே.பி.சக்திவேலு வரவேற்றார். 

சங்கத்தின் நிர்வாக செயலர் ஜி.ரமேஷ் சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். 

சேவை செயலர் கே.வெங்கடாஜலம், பொருளாளர் ஏ.சக்திவேல், முன்னாள் தலைவர்கள் வழக்குரைஞர் எஸ்.கிறிஸ்டோபர், தொழிலதிபர் பொறியாளர் மோகன், நிர்வாகிகள் எஸ்.மகேஸ்வரன், எஸ்.நாகராஜ், பி.பொன்னுசாமி, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் வேல்முருகன், சரவணன், முருகேசன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT