தமிழ்நாடு

வங்கக்கடலில் டிச. 2-இல் புதிய புயல்?

DIN

வங்கக்கடலில் டிச.2-இல் புதிய புயல் உருவாகும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை உருவாகவுள்ளது. இது வரும் திங்கள்கிழமை (நவ.30) காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும், இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும். இது புயலாக வலுவடையலாம் என்றாா் அவா்.

அதி பலத்தமழை பெய்யும்: இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகம், புதுச்சேரி கடற்கரை அருகே வரும்போது, ஓரிரு இடங்களில் டிசம்பா் 2, 3 ஆம் தேதிகளில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 230 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் வடபுதுப்பட்டுவில் 160 மி.மீ., வேலூா் மாவட்டம் பொன்னை அணைக்கட்டு, வேலூா், அம்முண்டியில் தலா 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று மிதமான மழை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை(நவ.28) மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி நிக்கோபாா் தீவு பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 30-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT