தமிழ்நாடு

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு

DIN

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளா் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சில ஆசிரியா் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டன.

இதையடுத்து அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT