தமிழ்நாடு

தமிழக அரசின் வெள்ள மீட்புப் பணிகள் மிகவும் மோசம்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

28th Nov 2020 05:42 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் வெள்ள மீட்புப் பணிகள் மிகவும் மோசமாக உள்ளதாக சனிக்கிழமை வரதராஜபுரம்  பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கிய  பின்பு டி.ஆர்பாலு  எம்பி குற்றச்சாட்டினார்.  

நிவர் புயல் காரணமாகவும் கடந்த செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பிடிசி காலனி, ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளும், சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிறுப்புபகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் குடியிறுப்புகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளநீரை  அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பிடிசி காலனி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆலந்தூர்  சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலந்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, போர்வைகள், ரொட்டி துண்டுகளை வழங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், 

ADVERTISEMENT

கடந்த 2015 ஆம் ஆண்டும்  வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தும் அதிமுக அரசு பாடம் கற்றுக்கொள்ளாததால் தான் தற்போது மீண்டும் இந்த பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் தொழில்நுட்ப ரீதியில் நடைபெறவில்லை. வரதராஜபுரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் 40 சதுரகிலோமீட்டர் சுற்றளவில் வெள்ள பாதிப்பு பகுதிகளில்  தரைமட்டத்தை அளவிட்டு தொழில்நுட்ப ரீதியில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.  

வெள்ள மீட்பு  நடவடிக்கைகளில்  தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இன்னும் நான்கு மாதத்தில் தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமையும். திமுக அரசு அமைந்தவுடன் இந்த பிரச்ணைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT