தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே ஏரி தூர்வாராததால் வீணாக வெளியேறும் உபரி நீர்

DIN

திருவள்ளூர் அருகே ஏரி தூர்வாரி மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் ஏரி நிரம்பியும், விவசாயத்திற்குப் பயன்படுத்தும் வகையில் அதிகம் தேக்கி வைக்க முடியாத நிலையில் உபரி நீர் மடை வழியாக வெளியேறி வீணாக வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 586 ஏரிகள் உள்ளன. இவற்றில் கொசஸ்தலை ஆற்று வடிகாலில் மொத்தம் 336 ஏரிகளில் 39 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. அதேபோல், ஆரணி ஆற்றின் வடிகாலில் மொத்தம் உள்ள 250 ஏரிகளில் 49 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

80 ஏரிகள் 70 சதவீதமும், 50 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. ஆனால் திருவள்ளூர் அருகே நம்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. இந்த ஏரி 120 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் 300 ஹெக்டோர் பரப்பளவில் பாசன வசதியும் பெற்று வருகிறது. அதோடு இந்த ஏரி நிரம்பினால், இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள விவசாய கிணறுகளிலும் நீர் வரத்தும், கிராமங்களில் குடிநீர் ஆதாரமும் கிடைக்கும்.

இந்த நிலையில் திருவள்ளூர் பகுதியில் நிவர் புயலால் தொடர்ந்து கடந்த 3 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஏரிக்கும் நீர் வரத்து ஏற்பட்டு முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், ஏரி தூர்வாரி மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் மேடான நிலையில் தேங்கிய நீர் அனைத்தும் மடை வழியாக வீணாக வெளியேறி வருகின்றது. இதனால் விவசாய பாசனத்திற்கும், மீன் வளர்ப்புக்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் கூறுகையில், 

இதைக் கருத்திற்கொண்டு கடந்த பல ஆண்டுகளாக ஏரியில் அதிக நீர் சேகரிக்கும் படி தொடர்ந்து கோரிக்கையும் விடுத்தும் வந்தனர். ஆனால், தூர்வாருவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த ஏரி ஒரு முறை நிரம்பினால் குறைந்தது 5 மாதங்களுக்கு நீர் தேங்கியிருக்கும். இதனால் ஒரு சாகுபடி முழுவதும் எடுக்க முடியும்.

அதேபோல், அதற்கு அடுத்த சாகுபடிக்கான நீர் கிணறுகள் மூலமும் மேற்கொள்ள முடியும். இந்த ஏரிகள் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், ஏரியில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் மேடாகக் காட்சியளித்து வருகிறது. அதனால், அதிகளவில் நீரைத் தேக்கி வைக்கும் தூர்வார வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே நிதி ஒதுக்கீடு செய்தவுடன் தூர்வாரி கரைகள் பலப்படுத்திப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மராமத்து பணிகள் மேற்கொள்ளாத நிலையில் நீர் நிரம்பியும் வீணாக மடைவழியாக வெளியேறும் நீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT