தமிழ்நாடு

நிவர் புயல் பாதிப்பு: நவ. 30-ல் தமிழகம் வருகிறது மத்தியக் குழு

DIN

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் திங்கள் கிழமை (நவம்பர் 30) மத்தியக் குழு தமிழகம் வருகிறது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 26-ஆம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் சேதங்களைச் சந்தித்தன.

இந்நிலையில் நிவர் புயல் பேரிடர் பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்குவதற்காக சேத மதிப்புகளைக் கணக்கிட வரும் 30-ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது. 

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஆய்வுப் பணிகள் நடைபெறும் என்றும், தமிழத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT