தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,924 பேர்

28th Nov 2020 12:52 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னைக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 3,924 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2 சதவீதமாகும்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,14,191 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,06,429 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,838 பேர் பலியாகியுள்ளனர். இது 1.79 சதவீதமாகும்.

இதையும் படிக்கலாமே.. செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு

கரோனா பாதித்தவர்களில் 59.91 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

ADVERTISEMENT

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் மட்டும் 412 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கடுத்த நிலையில் திருவிகநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே.. உயர் நிறுவன அதிகாரிகளின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் வெறும் ரூ.7,400க்கு விற்பனை

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT