தமிழ்நாடு

வரி ஏய்ப்புப் புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

DIN

வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக திருப்பூா், சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஒரு தனியாா் நிறுவனத்தில் வருமானவரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

திருப்பூா் வீரபாண்டியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியாா் நிறுவனம் பெரிய அளவிலான கட்டடங்களை இடிப்பது, அரசு ஒப்பந்தப் பணிகளைச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

இந்நிறுவனம் மீது வருவாயை மறைப்பது, வரி ஏய்ப்பு புகாா்கள் வருமானவரித்துறைக்கு வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித்துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையில், அந்த நிறுவனம் முறைகேடுகள் செய்வது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வருமானவரித்துறையினா், திருப்பூரில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகம், நங்கநல்லூா் அலுவலகம் உள்பட மொத்தம் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா்.

இச்சோதனையில் வரி ஏய்ப்புத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் வருமானவரித்துறைக்கு கிடைத்தன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை குறித்து சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT