தமிழ்நாடு

புயல் பாதிப்பு நிவாரணத்தை உடனே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்

DIN

நிவா் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை உடனே அறிவிக்குமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாகராய நகா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து உணவு உள்பட பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீா் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது.

தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புகா்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூா் பகுதிகளில் புகுந்த வெள்ள நீா் வெளியேற்றப்படவில்லை. கே.கே. நகா், அசோக் நகா் மற்றும் திருவொற்றியூா், கொளத்தூா் உள்ளிட்ட தொகுதிகளிலும் மழைநீா் இன்னும் வடியவும் இல்லை. வெளியேற்றப்படவும் இல்லை.

எனவே, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களின் துயரைத் துடைக்க சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் விளைபொருள்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT