தமிழ்நாடு

‘கன்னிராசி’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை

DIN

நடிகா் விமல் நடித்த ‘கன்னிராசி’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகா் விமல் நடித்த கன்னி ராசி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கா்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி படம் வெளியாகவில்லை. இப்படம் வெள்ளிக்கிழமை (நவ.27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விநியோக உரிமை வேறொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் நிறுவனத்திடம் பெற்ற தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. கிங் மூவி மேக்கா்ஸ் தயாரிப்பாளா் ஷமீன் இப்ராஹிம் வரும் டிசம்பா் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT