தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் நான்காவது  முறையாக வெள்ளிக்கிழமை  100 அடியை எட்டியது . இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இது அணையின் 87 ஆண்டுகால வரலாற்றில் 66வது ஆண்டாகும்.

தொடர்ந்து நீர்வரத்து மேட்டூர் அணைக்கு அதிகரித்து வந்ததால் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாகவும், அக்டோபர் 24-ஆம் தேதி நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாகவும் 100 அடியை எட்டியது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வெள்ளிக்கிழமை பகலில் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக 100 அடியை எட்டியது.   இதனால்  விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,111 அடியாகவும், நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 250 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT