தமிழ்நாடு

தி.மலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

27th Nov 2020 06:42 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதையொட்டி வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படுகிறது. 
அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதையொட்டி வெளியூர் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வரும் 28, 29, 30ஆம் தேதிகளில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கரோனா பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 
 

Tags : Tiruvannamalai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT